Sunday 25 September 2016

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

திரைப்படம்: சரஸ்வதி சபதம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன் 

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய் அம்மா பேச வைத்தாய்

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

Friday 23 September 2016

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

    படம : அடுத்த வீடு பெண்
    இசை: ஆதி நாராயண ராவ்
    பாடல் : T.N. ரமையாஹ் தாஸ்
    பாடியவர் : P.B.Srinivas


    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
    காதலே கேட்டு கேட்டு கொள்ளாதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே (கண்ணாலே)

    பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
    பக்தன் உள்ளம் நிதம் ஏங்கி வாடுதே
    ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே
    என் அன்னமே, உன் பின்னல் ஜடை ஆடுதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே (கண்ணாலே)

    பதுமை போல காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வழியிலே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ

கடவுள் அமைத்து வைத்த...

படம் - அவள் ஒரு தொடர்கதை
பாடியவர் -S .P. பாலசுப்ரமணியம்
இசை - M.S. விஸ்வநாதன்


கடவுள் அமைத்து வைத்த மேடை -
இணைக்கும் கல்யாணம் மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி
வைத்தானே தேவன் அன்று
(கடவுள்)
நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே
ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு
அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண்கிளி அதனிடம் ஆண்கிளி
இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே ...ஆருயிரே ...என் அத்தான்
(கடவுள்)
கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த மேகத்தில்
சீர் கொண்டு வந்ததம்மா
தேன் மொழி மங்கையர்
யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள்
பல்லாங்கு பாடுதம்மா
(கடவுள் )
கன்றோடு பசு இன்று கல்யாணப் பெண் பார்த்து
வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வெண்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள்
ஆங்கிலம் பாடுதம்மா ?????
(kadavul)
ஒரு கிளி கையோடு ஒருகிளி கைசேர்த்து
உறவுக்குள் நுழையுதம்மா உல்லாச வாழ்க்கையை
உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண்கிளி தப்பாக நினைத்தது
அப்போது புரிந்ததம்மா - அது
எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான்
இப்போது தெரிந்ததம்மா
(கடவுள்) 

கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து....

திரைப்படம்:ரிக்க்ஷாக்காரன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

சிறு மணல் வீட்டில் குடிஏறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது
பொங்கும் நுரையோடு கரை சேரும் அலையானது
இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது
இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போடுதோ
இரு விழி கொண்டு என்னை பார்த்து எடை போடுதோ
ஒரு துணை வந்து விலை கொள்ள தடை போடுதோ
அதை நான் வாங்க அவள் நாணம் தடை போடுதோ

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தாள் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து 

ஓராயிரம் பார்வையிலே......

படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்


நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

(ஓராயிரம் பார்வையிலே) 

ஓடி ஓடி உழைக்கணும்

படம்:நல்ல நேரம்
இசை: K.V.மகாதேவன்
பாடல் : வாலி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
அங்கொண்ணு சொல்லுறதை கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவை பாரு ஐயாவை கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப்ப் போடு.

ஓடி ஓடி உழைக்கணும்.. ஓ..ஓ..ஓ..

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் .. நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்.

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ… 

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது

    படம் : இளமை ஊஞ்சலாடுது
    பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்
    இசை : இளையராஜா
    வரிகள் : வாலி
    ________________________________

    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
    மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன


    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்


    கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
    மழை நீ நிலம் நான் தயக்கமென்ன


    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
    ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர


    பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
    கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
    கையிறேண்டிலும் ஒரே லயம்
    இரவும் பகலும் இசை முழங்க


    ஒரே நாள் ……..
    உன்னை நான் ……….
    நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஊஞ்சலாடுது …
    அஹ அஹ அஹ ஆஹா